சமந்தா குறித்து முதன்முறையாக மனம் திறந்த நாக சைத்தன்யா..!!

கஸ்டடி படத்திற்கான ப்ரோமோஷனில் ஈடுபட்டு வரும் நாக சைத்தன்யா, தனது எதிர்கால படங்கள் குறித்தும் முன்னாள் மனைவியும் நடிகையுமான சமந்தா பற்றியும் நிறைய விஷயங்களை பேசியுள்ளார். 
 

சமந்தாவும் நாக சைத்தன்யாவும் விவகாரத்து பெற்று ஓராண்டாக்கு மேலாகிவிட்டாலும், அவர்கள் தொடர்பான செய்திகளுக்கு மக்கள் தொடர்ந்து முன்னிலை கொடுத்து வருகின்றனர். நாக சைதன்யா தற்போது கஸ்டடி படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் தனது முன்னாள் மனைவியைப் பற்றி பேசியுள்ளது வைரலாகியுள்ளது.

விவகாரத்துக்கு பிறகு தாங்கள் இருவருமே மாறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சமந்தா ஒரு அழகான மனிதர். விவாகரத்துக்கு முன் நாங்கள் வித்தியாசமாக இருந்தோம். 'இரண்டு வருடங்களுக்கு மேலாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். முறைப்படி விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிறது. நீதிமன்றம் எங்களுக்கு விவாகரத்து வழங்கியது. நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் முன்னேறிவிட்டோம். என் வாழ்க்கையின் அந்தக் கட்டத்தை நான் மிகவும் மதிக்கிறேன் என்று கூறினார். 

மேலும் பேசியுள்ள அவர், சமந்தா அன்பான நபர் மற்றும் அனைத்து மகிழ்ச்சிகளுக்கும் தகுதியானவர். ஊடகங்கள் நம்மிடையே விசித்திரமான செயல்களைச் செய்கின்றன. பொதுமக்களின் பார்வையில் பரஸ்பர மரியாதை இழக்கப்படுகிறது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமும் ஒரு பாடம். நான் என் வாழ்க்கையை நேர்மறையாகப் பார்க்கிறேன். எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி என்று நாக சைத்தன்யா பேசினார்.

நாக சைதன்யா தற்போது கஸ்டடி படத்தில் நடித்து முடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் 12-ம் தேதி வெளிவருகிறது. லவ் ஸ்டோரி படத்திற்கு பிறகு நாக சைதன்யாவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தியில் அமீர்கானுடன் நடித்தாலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் கஸ்டடி படத்தை பெரிதும் அவர் எதிர்பார்த்துள்ளார்.

சமந்தாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா மற்றொரு நடிகை ஷோபிதாவை காதலிப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் உலவி வருகின்றன. இருவரும் அடிக்கடி சுற்றுலா மற்றும் வெளியூர் செல்வதாக கூறப்படுகிறது. சமீபத்தில், லண்டன் ஹோட்டலில் இருவரும் கைகோர்த்து பேசிய சம்பவங்கள் வீடியோவாக வெளியாகின. எனினும் அவர்கள் காதலிக்கின்றனரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை.