விரைவில் நாக சைதன்யாவுக்கு திருமணம்..!
நடிகை சமந்தாவை பிரிந்த சிறிது நாட்களிலேயே நடிகை சோபிதா துலிபாலாவுடன் காதலில் விழுந்தார் நாக சைதன்யா. இருவரும் உள்நாட்டில் சுற்றினால் தெரிந்து விடும் என்ற காரணத்தினால் வெளிநாடுகளில் டேட்டிங் செய்து வந்தார்கள். இவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த போதும் அது தொடர்பில் மௌனம் காத்து வந்தார்கள்.
இதை தொடர்ந்து திடீரென நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை நாக அர்ஜுனா தனது எக்ஸ் தல பக்கத்தில் பகிர்ந்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நாக சைதன்யா- சோபிதா துலிபாலாவின் திருமணம் கூடிய விரைவில் நடக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி அவர்களுடைய திருமணம் ராஜஸ்தானில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது இவர்களுடைய திருமணம் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் தான் நடைபெற உள்ளதாம்.
இந்த இடத்தில் நடந்தால் தான் சினிமா பிரபலங்கள் மற்றும் பிற துறை பிரபலங்கள் வருவதற்கு எதுவாக இருக்கும் என்று நாக சைத்னயா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு சோபிதாவும் ஒப்புக்கொண்டு விட்டதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தற்போது தகவல்கள் கசிந்து உள்ளன.