பிரபல ஹிட் படத்தின் ரீமேக்கில் நாக சைத்தன்யா மற்றும் ஜோதிகா?
இந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த பிரபலமான படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் ரீமேக்கில் நாக சைத்தன்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Jun 8, 2023, 11:05 IST
கடந்தாண்டு பாலிவுட் சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் ப்ஹூல் புலையா 2, கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, தபு நடித்த இப்படம் வெறும் ரூ. 75 கோடியில் எடுக்கப்பட்டு ரூ. 250 கோடி வரை வசூலித்தது.
மேலும் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. காமெடி த்ரில் அம்சம் கொண்ட இந்த கதையின் தென்னிந்திய ரீமேக் உரிமையை ஞானவேல் ராஜா கைப்பற்றியுள்ளார். படத்தை ரீமேக் செய்யும் பணிகளும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ப்ஹூல் புலையா 2 தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்கில் நடிப்பதற்கு ஜோதிகா மற்றும் நாக சைத்தன்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கதையில் தென்னிந்திய பாணிக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.