நாகர்ஜுனா போட்ட ஸ்ட்ராங் கண்டிஷன்..! சோபிதாவுக்கு வந்த பிரச்சினை!

 

2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் கோவாவில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். எனினும் இவர்களது வாழ்க்கை நீடிக்க வில்லை. விரைவிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா நடிகை சோபிதாவின் காதல் வலையில் விழுந்தார். தற்போது இவர்கள் இருவருக்கும் நிச்சய தார்த்தமும் முடிந்துள்ளது. கூடிய விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

ஏற்கனவே நாக சைதன்யா வாழ்க்கையில் நடந்த தவறுகள் மீண்டும் நடக்கக்கூடாது என்பதற்காக நாகர்ஜுனா கவனமாக இருப்பதாகவும், இதனால் திருமணத்திற்கு முன்பே சோபிதாவுக்கு சில விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளதாகவும் தெரிகின்றது. அவர் நிபந்தனைகளுக்கு சோபிதா ஒப்புக்கொண்ட பின்னர் தான் இந்த திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சோபிதாவுக்கு திருமணத்திற்குப் பிறகு நடிக்க சுதந்திரம் கொடுத்த நாகர்ஜுனா, ஒரே ஒரு நிபந்தனை கூறியுள்ளாராம். அதாவது எந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரும் கணவன் மனைவி இருவரும் அது தொடர்பில் பேச வேண்டும் என்பதுதான். அதில் இருவருக்கும் உடன்பாடு இருந்தால் தான் நடிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த பணியில் கவனம் செலுத்துமாறு கூற சோபிதா சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகின்றது. இதனால் திருமணத்திற்கு பிறகு சோபிதா தொடர்ந்து நடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.