நிர்வாணமாக போட்டோஷூட்...டிரான்ஸ்பரன்ட் உடையில் மொத்த கர்ப்ப வயிற்றையும் காட்டிய ராதிகா ஆப்தே!

 

2005ம் ஆண்டு இந்தியில் வெளியான வா லைஃப் ஹோத்தோ ஹைசி படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ராதிகா ஆப்தே கடந்த 2012ம் ஆண்டு தமிழில் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.அழகுராஜா, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியளவில் பிரபலமானார்.

2011ம் ஆண்டு பெனிடிக்ட் டெய்லர் என்பவரை லண்டனில் சந்தித்து காதல்வயப்பட்ட ராதிகா ஆப்தே தனது திருமணத்தை 2013ம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தி முடித்தார். ஆனால், அவருக்கு குழந்தை பிறக்கும் வரை பலருக்கும் அவர் திருமணமானவர் என்பதே தெரியாமல் ரகசியமாகவே இருந்தது. திருமணமாகி சுமார் 11 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு கர்ப்பமான நிலையில், அதனை அறிவித்த ராதிகா ஆப்தே 4 நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்ததாக போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அடுத்த புராஜெக்ட்டுக்கான மீட்டிங்கை குழந்தை பிறந்ததற்கு பின்பு முதல் முறையாக சந்திக்கிறேன் என லேப்டாப் முன்பாக ஜூம் மீட்டிங்கில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார் ராதிகா ஆப்தே.

நடிகை ராதிகா ஆப்தே சில படங்களில் நிர்வாணமாக நடித்தே சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது தனது நிறைமாத உடலுடன் நிர்வாணமாக நிற்பது போல வெறும் வலை போன்ற டிரான்ஸ்பரன்ட் உடையை அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உடம்பில் டிரான்ஸ்பரன்ட் ஆடையை அணிந்துக் கொண்டு படு போல்டாக அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பலரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

உலகளவில் பிரபலமான Vogue மேகஸினுக்காக இப்படியொரு போல்டான போட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார் நடிகை ராதிகா ஆப்தே என்பது குறிப்பிடத்தக்கது.

ஒல்லி பெல்லியாக இருந்த ராதிகா ஆப்தேவா கர்ப்பகாலத்தில் இப்படி பருமனாக மாறியிருந்தார் என்றும் அமலா பாலும் இதை போலத்தான் மாறியிருந்தார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

2016ம் ஆண்டு வெளியான பார்ச்சட் படத்தில் நிர்வாணமாகவே ராதிகா ஆப்தே நடித்திருப்பார். லஸ்ட் ஸ்டோரீஸ் மற்றும் சில விளம்பரங்களில் தனது அந்தரங்க பகுதிகளை அப்படியே ஓபனாக காட்டி போல்டாக நடித்து ஏகப்பட்ட சர்ச்சைகளை கிளப்பினார். அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம், மீடூ இயக்கம் என பெண்களுக்கு ஆதரவாகவும் சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும் பற்றி பேசியதால் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் இவருக்கு குறைந்து ஓடிடியில் மட்டுமே நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.