49 வயது நடிகர் 21 வயது நடிகைக்கு லிப்லாக்..!!
பாலிவுட் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வரும் கங்கனா ரணாவத் நடிப்பதுடன் சொந்தமாக படங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார். அவருடைய தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் டிக்கு வெட்ஸ் ஷேரு. இதில் நவாஸுதின் சித்திக் மற்றும் அவ்னீத் கவுர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தியில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸுகளில் நடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நவாஸுதின் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து பல்வேறு பாலிவுட் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் நடிகை கங்கனா ரணாவத் தயாரித்து வரும் டிக்கு வெட்ஸ் ஷேரு படத்தில் நவாஸுதின் சித்தீகி தான் ஹீரோ. இந்த படத்தில் அவ்னீத் கவுர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் நவாஸுதின் சித்தீகி நடிகை அவ்னீத்துக்கு உதட்டோடு உதடு முத்தம் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நடிகர் நவாஸுதினுக்கு 49 வயது ஆகிறது, ஆனால் கதாநாயகிக்கு வெறும் 21 வயது தான். கங்கனா தயாரிக்கும் படத்தில் இதை எப்படி அனுமதித்தார் என்று பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.