அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த நயன் - விக்கி ஜோடி..! 

 

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் மட்டும் பிசியாக இல்லாமல் சொந்த தொழில் செய்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி கணவர் குழந்தைகளையும் அவ்வப்போது கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார் என்பதையும் அவரது இன்ஸ்டாகிராம் பதிவிலிருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் திடீரென இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் முதல் முறையாக கவர்ச்சி உடையுடன் பத்திரிகை ஒன்றுக்கு கிளாமராக நயன்தாரா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹலோ என்ற பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள இந்த போஸ் நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளை நிற அல்ட்ரா மாடல் உடை அணிந்துள்ள நயன், கோட் சூட் போட்டுள்ள கணவரின் அருகில் அட்டகாசமாக இருந்தாலும் இந்த போஸ் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பார்க்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு பின்னர் அவர் கணவருடன் இணைந்து எடுத்த போட்டோஷூட்டுக்கள் புகைப்படம் எல்லாமே நாகரீகமாக இருந்த நிலையில் இந்த புகைப்படம் அளவுக்கு அதிகமாக கிளாமராக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.