இப்படியொரு நயன்தாராவை பார்த்ததே இல்லையே- லீக்கான ஜவான் பட லுக்...!!

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நயன்தாராவின் லுக் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது ஷாரூக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ப்ரியாமணி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்ததை அடுத்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் வெளிவந்துவிட்டன.

அதில் ஷாரூக்கானின் லுக் ஓரளவுக்கு புலப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கதாநாயகி நயன்தாராவின் லுக் எப்படியிருக்கும் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில் படத்தில் அவர் நடித்துள்ள காட்சியில் இருந்து, ஒரு புகைப்படம் லீக்காகி உள்ளது. அதில் நயன்தாரா மிகவும் ஸ்டைலாக காணப்படுகிறார்.

ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள ஜவான் படத்தை பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி, தென்னிந்திய ரசிகர்கள் காண்பதற்கு ஆவலுடன் உள்ளனர். ஜவான் படம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி வெளிவரவுள்ளது.