நாளை ஜூன் 9ம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் நயன்தாரா பட பாடல்..!
நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெற்றுள்ள ’இதுவும் கடந்து போகும்’ என்கிற பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளிவரவுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘நெற்றிக்கண்’. இந்த படத்தில் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ’பிளைண்டு’ என்கிற தென் கொரியா நாட்டுப் படத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவிட்டன. இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் நாளை காலை 9 மணிக்கு வெளிவரவுள்ளது.
தமிழில் கதாநாயகர்களுக்கு இணையான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. எனினும் சமீப நாட்களாக அஜித், கமல், ரஜினி போன்ற நடிகர்களுடன் அவர் நடித்த படங்கள் மட்டுமே வெளியாகி வந்தன. நீண்ட இடைவேளைக்கு பிறகு தன்னந்தனி ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ள படம் என்பதால், ‘நெற்றிக்கண்’ படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.