யூ ட்யூபர் இயக்கும் படத்தில் கதாநாயகியான நயன்தாரா..!!

சர்தார் படத்தை தயாரித்த நிறுவனத்தின், அடுத்த தயாரிப்பில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை யூ -ட்யூப் பிரபலமான விக்கி இயக்கவுள்ளார்.
 

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ஒவ்வொரு புதிய படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் நயன்தாரா வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்வது நடிப்பதே ஆகும். தற்போது அவர் நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகி உள்ளது. 

தற்போது ஷாரூக்கானுடன் ஜவான் மற்றும் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் ஃப்லிம்ப்ஸ் தயாரிக்கும் படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை யூ -ட்யூப் பிரபலமான டூட் விக்கி இயகுகிறார்.

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை பிரினிஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்‌ஷ்மனன் குமார் தயாரிக்கிறார். இந்நிறுவனம் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படத்தை தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த ப்ரினிஸ் பிக்சர்ஸ் லக்‌ஷமனன் குமார், யூ ட்யூபர் டூட் விக்கி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அதை நாங்கள் தயாரிப்பதில் பெருமை அடைகிறோம். எனினும் படம் தொடர்பாக தற்போது பேசுவது மிகவும் சீக்கரமாக இருக்கும் என்றார்.