விக்னேஷ் சிவனை திடீரென Unfollow செய்த நயன்தாரா..! முற்றுப்புள்ளி வைத்த நெட்டிசன்கள்..!
 

 
1

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த 2022-ம் ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் என்னும் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் திரைத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்கள் வாடகை தாய் மூலம் திருமணமான நான்கு மாதத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். இதுவும் அப்போது மிகப்பெரிய சர்ச்சை ஆக்கியது.

சமீபத்தில் முடிந்த காதலர் தினத்தன்று கூட இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் 10 years of 9 என பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தான் தற்போது நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளதாக செய்தி பரவி வருகிறது. அதில் நடிகை நயன்தாரா கண்களில் கண்ணீருடன் கூட எனக்கு இது கிடைத்தது என்று எப்போதும் அவள் சொல்வாள் (She’s gonna forever say ‘I got this’ even with tears in her eyes) என்ற பதிவை பகிர்ந்து உள்ளார்.

நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்ஃபாலோவ் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறுகாரணமாக தான் இது ஏற்பட்டதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மீண்டும் நயன்தாரா விக்னேஷ் சிவனை பாலோ செய்திருக்கிறார். இதன் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின் விவாகரத்து வதந்தி முடிவுக்கு வந்தது.