முதன்முறையாக கமல்ஹாசன் படத்தில் நடிக்கும் நயன்தாரா..!!

சினிமாவில் நயன்தாரா அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ரஜினிகாந்துடன் 5 படங்கள் நடித்துள்ளார். ஆனால் இதுவரை அவர் கமல்ஹாசனுடன் நடித்தது கிடையாது. இருவரும் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கூட உருவாகவில்லை.
 

விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் நயன்தாரா தான் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் உருவாகவில்லை.

லைகா நிறுவனம் தயாரிக்கும் அஜித் குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்தது. ஆனால் அவர் எழுதிய கதை லைகாவுக்கு பிடிக்கவில்லை என்பதால், அஜித் 62 படத்தில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். தற்போது அஜித் நடிக்கும் 62-வது படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து, இளமை ததும்ப ஒரு காதல் கதையை சொல்லியுள்ளார் விக்னேஷ் சிவன். அது கமலுக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில், படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நயன் தாரா நடிக்கவுள்ளார். ஆனால் அவர் தான் கதையில் நாயகியா? அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை. ஆனால் அவர் நடிப்பது உறுதி என்று படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

இத்தனை ஆண்டுகால திரைவாழ்க்கையில் நயன்தாரா, இதுவரை கமலுடன் இணைந்து நடிக்கவே இல்லை. இந்த படத்திலும் அவர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவில்லை என்றாலும், அவருடைய தயாரிப்பில் நடிப்பது படக்குழுவை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.