ஓடிடி-யில் வெளியாகிறது நயன்தாரா - ஜெயம் ரவி படம்..!  

 

என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அஹ்மத் இயக்கத்தில் வெளியான படம் ‘இறைவன்’. நயன்தாரா, விஜயலெட்சுமி, நரேன் ஆகியோர் நடிப்பில் சைக்கோ கில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது.

படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் அக்டோபர் 26ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.