நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படம் ரிலீஸ்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

 

நடிகை நயன்தாரா நடிப்பில் அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் வெளியீடு தொடர்பான அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் வெளியான ’தி ஐ’ என்கிற படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘நெற்றிக்கண்’. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதனால் சிறிய பட்ஜெட்டில் தயாரான படங்கள் பல ரிலீஸ் செய்யா முடியாமல் திணறி வருகின்றன. இந்த வரிசையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘நெற்றிக்கண்’ படமும் அடங்கும்.

இந்நிலையில் நடிகர் விக்னேஷ் ‘நெற்றிக்கண்’ படம் ஹாட்ஸ்டாரில் வெளிவருவதை உறுதி செய்து ட்வீட் பதிவிட்டுள்ளார். ஆனால் படம் எப்போது வெளியாகும் என்பதை தெரிவிக்கவில்லை. அநேகமாக விநாயகர் சதுர்த்தி நாளில் படம் ஓடிடியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.