லோகேஷ் கனகராஜ், அட்லீயை காப்பியடிக்கும் நெல்சன்… புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க போகிறாரா ?

 

கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி இருந்தார் நெல்சன் திலீப்குமார்.

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். ஆனால், பீஸ்ட் கலவையான விமர்சனம் பெற்றது.அண்மையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலைியல், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். பிலமெண்ட் பிக்சர்ஸ் என்ற பெயரில் அவர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தரமான காமெடியான படங்களை வழங்குவதே தன் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வரும் 3-ம் தேதி முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.