இட்லி கடை படக்குழுவுக்கு புதிய சிக்கல்..! மீண்டும் ரிலீஸ் தள்ளி போகுமா ? 

 
அக்டோபர் 1 ஆம் தேதி இட்லி கடை திரைப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உயர்ந்துள்ள நிலையில் தற்போது படக்குழுவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 

அதாவது அக்டோபர் 2 ஆம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள "காந்தாரா chapter 1" திரைப்படம் வெளியாகவுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தியேட்டர்களில் அந்தப்படத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் இட்லி கடை படத்திற்கு திரையிடும் இடங்களை உறுதி செய்யும் பணியில் படக்குழு துரிதமாக ஈடுபட்டுள்ளது. விநியோக வட்டாரத்தில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.