என்ன இருந்தாலும் சிரஞ்சீவி குடும்பத்தில் இப்படி நடந்திருக்கக் கூடாது..!!

சிரஞ்சீவியின் தம்பி மகளும் நடிகையுமான நிஹாரிகா தனது காதல் கணவர் சைதன்யாவை பிரியவுள்ளதாக  வெளியான செய்தி தெலுங்கு சினிமா ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
 

தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம் முக்கிய திரை நட்சத்திர அந்தஸ்த்தை பெற்றதாகும். சிரஞ்சீவியின் உடன்பிறந்த சகோதரர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு சகோதிரி. இதில் சிரஞ்சீவி தான் மூத்தவர். இவருடைய முதல் தம்பி நாகேந்திர பாபு. இவருக்கு வருண் தேஜ் என்கிற மகனும் நிஹாரிகா என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே நடிகர்கள் தான். 

தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நால்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நிஹாரிகா தான் கதாநாயகி. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தெலங்கானாவின் வளர்ந்து வரும் தொழிலதிபர் சைதன்யா என்பவரை நிஹாரிகா திருமணம் செய்துகொண்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உதய்பூரில்  நிஹாரிகா - சைதன்யாவின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்தாண்டு முதல் தம்பதிகளுக்கிடையே மனக்கசப்புகள் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இருவரும் இன்ஸ்டாவில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். இதனால் நிஹாரிகா - சைதன்யா இருவரும் விவகாரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

தொழில்துறையில் சாதித்து வரும் சைதன்யா, சினிமாவிலும் கால் பதிக்க விரும்பியுள்ளார். இதற்காகவே நிஹாரிகாவை அவர் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது தெரியவந்ததும் தம்பதிகளுக்கு இடையில் பிரச்னைகள் உருவாகி, தற்போது இருவரும் மணமுறிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.