வருண் தேஜ் நிச்சயதார்த்த நிகழ்வுக்கு வராத நிஹாரிகாவின் கணவர்- விரிசில் உறுதியா..??

வருண் தேஜ் நிச்சயதார்த்த நிகழ்வில் அவருடைய மச்சான் சைத்தன்யா ஜொன்னலகட்டா பங்கேற்காதது, அவருக்கும் நிஹாரிக்காவுக்குமான விரிசலை உறுதிப்படுத்தியுள்ளது.
 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகன் வருண் தேஜ். இவருக்கும் நடிகை லாவண்யா திரிபாதிக்கும் கடந்த 10-ம் தேதி ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

வருண் தேஜின் உடன்பிறந்த தங்கையான நிஹாரிகா, மணமக்களை தான் மட்டும் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு இளம் தொழிலதிபர் சைத்தன்யா ஜொன்னலகட்டா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை இருவரும் உறுதிசெய்யவில்லை, அதேசமயத்தில் விவாகரத்துக்கும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே நிஹாரிகா மற்றும் சைத்தன்யா ஜொன்னலகட்டாவை குறித்து பல்வேறு செய்திகள் தெலுங்கு ஊடகங்களில் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளன. 

இந்நிலையில் அண்ணன் வருண் தேஜ் மற்றும் லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்த விழாவில் நிஹாரிகா மட்டும் தனியாகவே வந்திருந்தார். இதனால் அவர்கள் இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.