நிதின், ராஷ்மிகா படத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட சிரஞ்சீவி..!!

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.
 
 

கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் பீஷ்மா. வெங்கி குடுமுலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நிதின் ஹீரோவாகவும் ராஷ்மிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது இதே கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் பூஜை கடந்த 24-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இயக்குநர்கள் ஹனு ரகாவாபுடி, கோபிசந்த் மலினேனி, பாபி கொல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படத்துக்கான முதல் காட்சியை நடிகர் சிரஞ்சீவி கிளாப் அடித்து துவக்கி வைத்தார். இந்த படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே இந்த படம் துவங்கப்படுவதற்கான அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டது.