இயக்குநர் ராம் படத்தில் நடிக்கும் நிவின் பாலி..!

 

மம்மூட்டி நடிப்பில் வெளியான பேரன்பு படத்தை தொடர்ந்து நிவன் பாலி நடிக்கும் படத்தை நடிகர் ராம் இயக்கவுள்ளார். விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் தங்கமீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்கள் மூலம் மாற்றத்திற்கான சினிமாவுக்கு வழி வகுத்தவர் ராம். இறுதியாக இவருடைய இயக்கத்தில் வெளியான ‘பேரன்பு’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. எனினும், பல்வேறு சர்வதேச விழாக்களில் பங்கெடுத்து முக்கிய விருதுகளை அந்த படம் வாரி குவித்தது.

அடுத்ததாக இவர் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமான நிவின் பாலி, மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார். பிரேமம் படத்தின் மூலம் தேசியளவில் கவனமீர்த்த அவர் தமிழில் கடைசியாக வெளியான  ‘ரிச்சி’ என்ற படத்தில் நடித்தார்.

தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ராம் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.