யாரும் அறியாத இன்னொரு சூரி..! படையப்பா படத்தில் நடிகர்களுக்கு ஃபேன், குடை புடிச்சேன்! 

 

நடிகர் சூரி வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி  வருகின்றது. அதில் தான் ஆரம்பத்தில் நடிகர்களுக்கு குடை பிடித்து விட்டதாகவும், ஃபேன் பிடித்து இருப்பதாகவும் தனது கடந்த காலத்தை பற்றி பேசியுள்ளார்.

அதன்படி  தெரியவருகையில், நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு தேடி சென்ற போது பல இடங்களில் சின்ன சின்ன வேலைகளை செய்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய படையப்பா படத்தில் நடிகர்களுக்கு ஃபேன் போடுகின்ற வேலையையும் சூரி செய்துள்ளார்.

மேலும் அஜித் நடித்த வில்லன் பட செட்டிலையும் சூரி பணியாற்றியுள்ளார். இந்தத் தகவலை கேட்டு கே. எஸ் ரவிக்குமார் ஆச்சரியம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே சூரி வழங்கிய பேட்டியில் தான் சினிமாவுக்கு வர முதல் சாக்கடையில் கூட வேலை செய்து இருக்கேன், லாரி ஓட்டி இருக்கேன் என அவர் செய்துள்ள வேலைகளை பற்றி தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

<a href=https://youtube.com/embed/kFvXopimS2I?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/kFvXopimS2I/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">