பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட முக்கிய காரணமே தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தான்..!

 
தாய்ப்பால் வாரத்திற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை சரண்யா பொன்வண்ணன், தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகக்கூடும் மேலும் குழந்தைகள் அழகாக மாறுவார்கள் என கூறியுள்ள செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கின்றது.

அதன்படி அவர் கூறுகையில், உலக தாய்ப்பால் வாரத்தைக் கொண்டாடும் நிகழ்வுக்காக என்னை அழைத்தது பெருமையாக உள்ளது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி தாய்மார்கள் அனைவரும் எடுத்துரைப்பதற்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியதில் மகிழ்ச்சி. தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் இடையில் குறைந்திருந்தாலும் தற்போது அதிகரித்துள்ளது.

தாய்மார்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமான தாய் பால் உருவாகின்றது. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறையும் என்பதில் எந்தவித உண்மையும் இல்லை. தாய்ப்பால் கொடுப்பதால் தான் குழந்தை மற்றும் தாயின் அழகும் கூடும்.

பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட முக்கிய காரணமே தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தான். எனது இரண்டு குழந்தைகளுக்கும் நான் தாய்ப்பால் கொடுத்தே வளர்த்தேன். அவர்கள் தற்போது ஆரோக்கியமாகவும் மனநிலை நல்ல விதத்திலும் காணப்படுவதோடு வைத்தியர்களாக காணப்படுகின்றார்கள் என்று சரண்யா பொன்வண்ணன் குறிப்பிட்டுள்ளார்.