ஒன்றல்ல...ரெண்டல்ல... மொத்தம் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக தேர்வானது ஓபன்ஹெய்மர் திரைப்படம்..!!  

 

ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும்போதும் நமக்கு பிடித்த பிரபலங்கள் அந்த உயரிய விருதை வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு அரண் போல் எழுந்து நிற்கும் .

அந்தவகையில் கிறிஸ்டோபர் இயக்கிய Oppenheimer படம் சுமார் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

ஜப்பானின் ஹீரோஷிமா மற்றும் நாகஸாகியை உருத்தெரியாமல் அழித்து சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாக காரணமான அணு குண்டின் தந்தை எனக் கொண்டாடப்பட்ட ஓபன்ஹெய்மருக்கு எதிராக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது .

இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் மீண்டு வந்தாரா இல்லையா என்கிற கதையை மையக்கருவாக வைத்து இயக்குநர் கிறிஸ்டோபர் ஓபன்ஹெய்மர் படத்தை இயக்கி உள்ளார்.

உலகப் போரின் போது உருவாக்கப்பட்ட உலகின் முதல் அணுகுண்டை பற்றி படம் இதுவாகும். இப்படத்தில் அணுகுண்டு வெடிக்கும் ஒரு காட்சி இருப்பதாகவும், அதற்காக உண்மையில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு Oppenheimer படம் சுமார் 13 பிரிவுகளில் தேர்வாகி உள்ளதை அடுத்து படக்குழுவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.