அனிகாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்- என்னாச்சு..??

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக நடித்து வரும் அனிகா சுரேந்தருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழில் என்னை அறிந்தால் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். இதையடுத்து நானும் ரவுடி தான், மிருதன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அஜித் குமார், நயன்தாராவுக்கு மகளாக ’விஸ்வாசம்’ படத்தில் நடித்ததை அடுத்து அனிகா தேசியளவில் பிரபலமானார்.

தற்போது குழந்தை நட்சத்திரமாக இல்லாமல் ஹீரோயினாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அதன்காரணமாக மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அனிகா கதாநாயகியாக நடித்த ‘ஓ மை டார்லிங்’ படம் தமிழில் வெளியானது.

இப்படம் பாக்ஸ் ஆஃப்ஸில் தோல்வி அடைந்தாலும் அனிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் அனிகாவுக்கு தமிழ்நாட்டில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டர் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அனிகாவுக்கு என்ன ஆனது? எதற்காக அவருக்கு இப்படியொரு போஸ்டர்? என்று நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் அந்த போஸ்டர் அனிகாவின் பெயர் ஆர். நந்தினி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எதாவது படத்தில் இடம்பெறும் காட்சிக்கு வேண்டி போஸ்டர் ஓட்டப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனினும் அனிகாவுக்கு கண்ணீர் அஞ்சலி ஒட்டப்பட்ட போஸ்டர் பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்டவர் தரப்பில் இருந்தோ அல்லது அனிகா தரப்பில் இருந்தோ உரிய விளக்கம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.