ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு!

 

கொரோனா பரவல் காரணமாக ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இரண்டு இடங்களில் நடைபெற்றது. தொகுப்பாளர் இன்றி இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது. இதில், சிறந்த இயக்குநர் விருது நோமேன்லேண்ட் என்ற திரைப்படத்திற்காக சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ் பெற்றுள்ளார்.

பிராமிசிங் யங் உமன் படத்திற்கு சிறந்த திரைக்கதை விருதும், சிறந்த தழுவல் திரைக்கதை ஃபாதர் என்ற திரைப்படத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. மா ரெய்னீஸ் பிளாக் பாட்டம் திரைப்படத்திற்காக ஆன் ராத் என்பவருக்கு சிறந்த ஆடை வடிவமைப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் டென்மார்க்கை சேர்ந்த  அனதர் ரவுண்ட் என்ற படத்திற்கும், சிறந்த அனிமேஷன் குறும்படம் இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ-க்கும் கிடைத்துள்ளது.

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் விருதை செர்ஜியோ லோபஸ் நிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் ஆகியோர் பெற்றுள்ளனர். முழுநீள அனிமேஷன் படம், சிறந்த பின்னணி இசை – சோல், சிறந்த ஒலி அமைப்பு - சவுண்ட் ஆஃப் மெட்டல் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சவுண்ட் ஆஃப் மெட்டல் சிறந்த படத்தொகுப்பான விருதையும் பெற்றுள்ளது. தி ஃபாதர் திரைப்படத்தில் நடித்த அந்தோனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

நோமேட்லேண்ட் படத்தில் நடித்த பிரான்சிஸ் மெக்டர்மாண்ட் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். யூதாஸ் அண்ட் பிளாக்மிசியா என்ற படத்தில் இடம் பெற்ற ஃபௌட் ஃபார் யூ சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.