ஓவர் பில்டப் சரி வராது பா.. அதிரடி முடிவு எடுத்த வெற்றிமாறன்..!

 

 இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் "மாஸ்க் " எனும் திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்த படத்திற்கு முன்னனி இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வருகின்றார். 

இந்த நிலையில் சூட்டிங்கில் பெரும்பாலான பணிகளில் கவின் தலையிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் கடுப்பாகிய இயக்குநர் சூட்டிங்கை இடையில் நிறுத்திவிட்டு வெற்றிமாறனிடம் முறையீடு செய்துள்ளார். அதன் பின்னர் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் வெற்றிமாறனும் கலந்து கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இருப்பதால் கவின் மிகவும் அமைதியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமன்றி பல படங்களில் கவின் இடையூறு செய்து வருவதால் இவருடன் கூட்டணி சேர்வதற்கு இயக்குநர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.