பத்ம பூஷன் விருதுபெற்ற நடனக் கலைஞர் கனாக் ரெலே காலமானார்.. !!

 

1937-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பிறந்த கனாக் ரெலே, குரு ‘பாஞ்சாலி’ கருணாகர பணிக்கரின் கீழ் ஏழு வயதிலிருந்து பயிற்சி பெற்றார். கேரளாவையும் அதன் கலை வடிவங்களையும் நேசித்த கனக் ரெலே, கலமண்டலம் ராஜலட்சுமியிடம் மோகினியாட்டம் பயின்றார். 

மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றாலும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றாலும், நடனத்தை தனது துறையாக தேர்ந்தெடுத்தார். 1973-ல் நாளந்தா நிருத்ய கலா மகாவித்யாலயாவை நிறுவினார்.

2022-ம் ஆண்டில், டாக்டர் கனாக் ரெலே புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் 2013-ல், டாக்டர் ரெலேவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. கேரள அரசின் முதல் குரு கோபிநாத் தேசிய புரஸ்காரம் பெற்ற மோகினியாட்டம் கலைஞர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். கதக்களி நடனத்துக்கும் பெயர் பெற்றவர்.

இந்த நிலையில், மும்பையில் தனது 85 வயதில் கனாக் ரெலே காலமானார். இவரது மறைவு நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவு நடன கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் கனாக் ரெலே மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.