விரைவில் பாண்டியன் ஸ்டோர் ரீல் ஜோடி... ரியல் ஜோடி ஆகிறது..! 

 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த நிலையில் அவருடைய முகப்பரு பிரச்சனை காரணமாக சீரியல் இருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு ஐஸ்வர்யாவை மீண்டும் சீரியலுக்குள் கொண்டு வர கண்ணனாக நடித்து வரும் சரவணன் அதிக முயற்சிகள் மேற்கொண்டு வந்ததாக ஏற்கனவே தகவல் பரவியது.

அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன.