திடீரென திருமணத்தை முடித்த பசங்க பட குட்டி ஜீவா..!

 

 'பசங்க' திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்றுப் புகழ் பெற்ற வெற்றிப் படமாக இருந்தது. அந்தப் படத்தில் 'ஜீவா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். 

ஆரம்பத்தில் நெகட்டிவாகவும் பின்னர் பாசிட்டிவாக மாறும் அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீராம் காட்டிய நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரது மனதில் இன்னும் அந்த கதாபாத்திரம் ஒட்டிக்கிடக்கிறது.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீராமுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. மேலும் அவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மணமக்கள் இருவரும் புன்னகையுடன் நிறைந்த அழகிய ஸ்டில்கள் தற்போது ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அழகிய புகைப்படங்கள் இதோ..