சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..! யாருன்னு கண்டு பிடிக்க முடியுதா ?
பாலிவுட்டில் தோனியின் பயோபிக் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்து. இது இருநூறு கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை புரிந்தது.
அதற்குப் பிறகு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக உருவாக்கப்பட்டது. ஆனால் அவை எதுவும் பெரிதாக பேசப்படவில்லை.
தமிழில் வெளியான 'தலைவி' திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். இதுவரையில் இளையராஜாவின் பாடல்கள் தான் என்னை தனிமையில் இருந்து காத்து வந்தது என்றும் வழிநடத்தியது என்றும் அவரது பாடல்கள் தான் நான் நடிக்கவே உறுதுணையாக இருந்தது என்றும் அண்மையில் உருக்கத்துடன் பேசி இருந்தார் தனுஷ்.
தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், தனுஷ் நடிக்கும் இளையராஜாவின் பயோபிக் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதைப்போல தனுஷே இயக்கி, நடித்துள்ள 'ராயன்' படமும் விரைவில் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ராஷ்மிகாவுடன் ஜோடியாக 'குபேரா' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதற்கு அடுத்ததாக இளையராஜா படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், தற்போது இசைஞானி இளையராஜா எப்படி இருந்தாரோ அதேபோன்ற லுக்கில் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.