வைரலாகும் புகைப்படங்கள்..! ராணுவ வீரர்களை சந்தித்த தளபதி விஜய்!
Nov 10, 2024, 06:35 IST
எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வருகிறார். இது இவரின் கடைசி படமாகும் .
இதில், விஜய்யுடன், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு. நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அகாடமியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அப்போது அங்குள்ள ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விஜய் சந்தித்துள்ளார். அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.