இனிமே தயவுசெஞ்சு இப்படி பண்ணாதீங்க..! நடிகர் சுதீப் செய்த செயலால் கடுப்பான பள்ளி நிர்வாகம்..!
சுதீப் கன்னட சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார்.அவருக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டமும் அங்கு இருக்கிறது.அவரை அப்படியே பின்பற்றும் ரசிகர்கள் இருக்கின்றனர்…இப்படி இருப்பதாலே பெரும் சிக்கல் வருவது வழக்கமாக உள்ளது.
சமீபத்திய Hebbuli என்ற படத்தில் சுதீப் ஒரு பக்கம் நீளமான முடி வைத்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் இருக்கிறார்…அவரது ஸ்டைலை பின்பற்றி அப்படியே அவரது ரசிகர்களும் ஹேர்ஸ்டைல் வைக்கின்றனர் இது பெரும் பிரச்சனை ஆகி வருகிறது.
பள்ளி மாணவர்களும் அதே ஸ்டைலில் முடி வெட்டிக்கொண்டு வருவதால் அவர்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது என பள்ளி ஆசிரியர்கள் தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர்.
சுதீப் போல முடி வெட்ட சொன்னால் வெட்டாதீங்க என கர்நாடகாவின் Kulahalli கிராமத்தில் இருக்கும் சலூன் கடைகளுக்கு அந்த ஊரின் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கடிதம் எழுதி இருக்கின்றார்…இதனால் இவருக்கு கொஞ்சம் ஆசிரியர்கள் மத்தியில் பெயர் டேமேஜ் ஆகியுளளது..