சினிமாவை தயவு செய்து காப்பாத்துங்க! போராட்டத்தில் குதித்த ஜெயிலர் பட இயக்குனர்..!

 

ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது…தமன்னா, சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் சுனில் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 10-ம் தேதி தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகிறது.இந்த படத்தின் ட்ரைலர் இப்போது 10 மில்லயனை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் ‘ஜெயிலர்’ என்ற பெயரில் மலையாளத்திலும் ஒரு படம் தயாராகி உள்ளது. சக்கீர் மடத்தில் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள இந்தப் படமும் வரும் 10-ம் தேதி வெளியாகிறது.

இதனால் மலையாளத்தில் மட்டுமாவது ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை மாற்றுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சக்கீர் கோரிக்கை விடுத்திருந்தார் இந்த விஷயம் மிகவும் பேசப்பட்டு வருகிறது..இப்படி ஒரு நிலைமையில் தவிக்கிறேன் என பரிதமாக சொல்லியுள்ளார் அவர்…

இந்நிலையில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்துக்குக் கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாள ஜெயிலர் படத்துக்கு 75 திரையரங்குகள் கேட்டும் கொடுக்கப்படவில்லை…

இதனால் இதன் இயக்குநர் சக்கீர் மடத்தில் கேரள பிலிம் சேம்பர் அலுவலக வாயிலில் தனியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்…மலையாள சினிமாவை காப்பாற்றுங்கள் என்ற அட்டையை வைத்திருந்தார்..இது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.