பொன்னி சீரியல் நடிகை திடீர் மாற்றம்..! 

 

கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் பொன்னி. அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவுடன், வெற்றிகரமாக 300 எபிசோடுகளுக்கு கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த தொடர் பெங்காலியில் பிரபலமான Gaatchora என்ற சீரியலின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தொடரில், 'ராஜா ராணி 2' சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வைஷு சுந்தர் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக சபரிநாதன் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன், வருண் உதய், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் முதலில் கதாநாயகனின் அம்மாவாக ஷமிதா நடித்து வந்த நிலையில்... அவர் பர்சனல் காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதில் சீரியல் நடிகை சிந்துஜா விஜி (ஜெயலட்சுமி) கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது இவரும் இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில், இவருக்கு பதிலாக சன் டிவியில் ஆனந்த ராகம், விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்களில் நடித்த ரிஹானா நடிக்கிறார்.

நடிகை சிந்து விஜயலக்ஷ்மிக்கு உடலநல குறைவு ஏற்பட்டதால் தான் சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.