பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து வெளியான உண்மை தகவல்..!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் - 2’ படம் புத்தம் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தென்னிந்தியப் படம் என்கிற அடையாளத்தை பதிவு செய்யவுள்ளது. 
 

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சுமார் ரூ. 800 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதனுடைய முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. 

இதனுடைய இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. இதையடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் தொடர்பான பிரத்யேக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தென்னிந்திய சினிமாவில் முதன்முதலாக 4 டி.எக்ஸ் தொழில்நுட்பத்தில் ‘பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் வெளிவருகிறது.

தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டு பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவருகிறது. முதல்பாகத்தை விடவும், இரண்டாவது பாகம் சற்று நீளமானது என்று கூறப்படுகிறது. அதன்படி பி.எஸ் 2 திரைப்படம் 4 மணிநேரம் ஓடும் என தகவல்கள் கூறுகின்றன.