PS 2 Single: ”அக நக.. அக நக.. முகநகையே” கொன்னுட்டீங்க ரஹ்மான் சார்...!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாக்ம் படத்தின் முதல் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு குவிந்து வருகிறது. 
 

தமிழில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக புத்தக வாசிப்பாளர்களால் கொண்டாடப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக உருவாக்கினார் மணிரத்னம். மிகுந்த பொருட்செல்வில் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தனர். 

<a href=https://youtube.com/embed/lccoC-rNw-w?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/lccoC-rNw-w/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் துவங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 29-ம் தேதி இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகவுள்ளன.

அதற்கு முன்னோட்டமாக பி.எஸ் 2-வின் முதல் சிங்கிள் ‘அக நக...’ பாடல் இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் ‘சிறு பாடலாக’ பிஎஸ் முதல் பாகத்தில் அமைந்திருந்தது. இது தற்போது முழு பாடலாக பி.எஸ் 2 படத்தில் இடம்பெற்றுள்ளது. அக நக  அக நக முகநகையே பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். இப்பாடலை பாடகர் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். 

இந்த பாடல் வெளியான சில நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் கடந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.