பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பாவம் ரசிகர்களுக்கு வந்த சோதனை..!!
தமிழ் சினிமாவில் பலரும் முயன்று கைவிட்ட பொன்னியின் செல்வன் நாவலை, திரைப்படமாக உருவாக்கினார் மணிரத்னம். மொத்தம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம், கடந்தாண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் இந்த பட்த்தில் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் சினிமாவில் நீண்ட கால எதிர்பார்ப்புடன் இருந்தது. பெரியளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், லாபகரமான படமாகவே அமைந்தது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட லாபம் வரவில்லை என்பது உண்மை தான்.
தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளிவரவுள்ளது. அதற்கு முன்னதாக வரும் 29-ம் தேதி சென்னையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடகக்வுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் 3.24 நிமிடம் ஓடும் என்று தெரியவந்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டிரெய்லர் 3.17 நிமிடங்கள். அதனால் ஒட்டுமொத்த படத்தின் நீளம் இரண்டு மணிநேரம் 50 நிமிடங்களாக இருந்தது. இது ரசிகர்களுக்கு பெரியளவில் சலிப்பை ஏற்படுத்தியது. தமிழ தவிர மற்ற மொழிகளில் இந்த படம் படு தோல்வி அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.
இப்போது பொன்னியின் செல்வன் டிரெய்லரே 3.24 நிமிடங்களாக உள்ளன. அப்போது படம் முந்தைய பாகத்தை விட, அதிக நீளமாக இருக்கலாம் என்று ரசிகர்களுக்கு கவலை எழுந்துள்ளது. இதை படக்குழு உணர்ந்து, படத்தின் நீளத்தை குறைத்து வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.