தமிழ் சீரியலில் எண்ட்ரியாகும் பிரபல நடிகை..!   

 

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் காணப்பட்ட நடிகை   தான் கௌதமி. இவர் நடிப்பில் 80, 90 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள். இவர் நடிப்பில் 80, 90 ஆம் ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என  பலமொழிகளிலும் நடித்து பிரபலமாக காணப்பட்டார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல நடிகர்களோடு நடித்துள்ளார். இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இறுதியாக கமலஹாசனுடன் இணைந்து நடித்த பாபநாசம் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகை கௌதமி சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கொள்ளாதே என்ற சீரியலில் என்ட்ரி  கொடுத்துள்ளார் கௌதமி.

இது தொடர்பான வீடியோக்களும் புரோமோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலில் கேமியா ரோலில் என்ட்ரி கொடுத்துள்ள கௌதமி தொடர்ந்து நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.