திருமணம் ஆன ஒரே வருஷத்தில் கணவரை பிரிந்த பிரபல சீரியல் நடிகை..! 

 
தீய வேலை செய்யணும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தவர் தான் ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி.சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைக்காததால் சீரியலுக்குச் சென்ற பிரியங்கா நல்காரி, 2015-ம் ஆண்டு முதல் தெலுங்குத் தொடர்களில் நடித்து வருகிறார். இதையடுத்து 2018-ம் ஆண்டு வெளியான ரோஜா என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் பிரியங்கா. இந்த சீரியலின் மூலம் இவரும் ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

ரோஜா சீரியல் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், அதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் என்கிற சீரியலில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் இருந்தும் பாதியிலேயே வெளியேறிய அவர் திடீரென திருமணமும் செய்து கொண்டார். மலேசியாவில் தன்னுடைய காதலனுடன் கோவிலில் ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரியங்கா, அதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது திருமண அறிவிப்பை திடீரென வெளியிட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரியங்கா தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொண்டார். அதோடு அவர் மலேசியாவிலேயே செட்டில் ஆனதால் அவர் இனி சீரியலில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி என்கிற சீரியலின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, கடந்த சில நாட்களாக சோகமான பதிவுகளை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அவர் தனது கணவரின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதும் சந்தேகத்தை எழுப்பியது.

இந்த நிலையில், சமூக வலைதளம் வாயிலாக நெட்டிசன்களுடன் கலந்துரையாடிய பிரியங்காவிடம் ஒருவர் நீங்கள் சிங்கிளா என கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் ஆமாம் என பதிலளித்ததால் அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் என்ன காரணத்திற்காக அவர் கணவரை பிரிந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. திருமணம் ஆன ஒரே வருஷத்தில் பிரியங்கா நல்காரி கணவரை பிரிந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

<a href=https://youtube.com/embed/bhJRykzRPYo?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/bhJRykzRPYo/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">