சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு சவால் விடும் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்..! 

 

2011 ஆம் ஆண்டு வெளியான, 'லத்திகா' என்கிற படத்தை இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்து பிரபலமானவர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன் என்றாலும் திரையுலகிற்காக தன்னுடைய பெயரில் பவர் ஸ்டார் என்கிற வார்த்தையை அவரே சேர்த்துக்கொண்டார்.இந்த படத்தை தொடர்ந்து, சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் இவரது திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்த படத்தை தொடர்ந்து,மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார். 

2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'கேப்மாரி' திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அதன்பின் வனிதா விஜயகுமார் ஹீரோயினாகவும், இவர் ஹீரோவாகவும் உள்ள படத்தை இயக்கி நடித்துள்ளார். 

இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்னை பார்த்தா பயம் என்று பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் கூறுகையில்,  என்னிடம் நிறைய திறமை உண்டு. ஆனாலும் யாரும் என்னை கூப்பிடவில்லை. அவ்வளவு ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட என்னை கூப்பிடவில்லை. அதற்கு காரணம் அவருக்கு என்னை பார்த்தா பயம். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் படத்தை வெளியிட்டு ஜெயிக்கிறார்கள். அது எப்படி நியாயம்? தனியா நின்று ஜெயிக்கணும். அது தான் ஒரு டாப் ஹீரோவுக்கு அழகு.

அஜித், விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல இவரும் தனியாக தனது ரசிகர்களை வைத்து ஜெயித்து காட்ட வேண்டும்.  எல்லாருடனும் நடித்து தனியாக பெயர் எடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் பற்றி பேசி உள்ளார் பவர் ஸ்டார்.

இவ்வாறு, முடிந்தால் என்னை ரஜினி கூப்பிடட்டும். களத்தில் ஒன்றாக சந்திக்கலாம். நானா அவரா என பார்ப்போம். யார் யாருக்கு எவ்வளவு ரசிகர்கள் என பார்த்து விடலாம் என மிக தைரியமாக சவால் விட்டிருக்கிறார் பவர் ஸ்டார்.