இந்தியன்- 2 பட வசூலுக்கு உலை வைக்கும் பிரபாஸ்..!!

இந்தியன் 2 படம் ரிலீஸாகும் அதேநாளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்டமான படமும் வெளியாகும் என்கிற செய்தி கோலிவுட், டாலிவுட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் ஷூட்டிங் 80% முடிந்துவிட்டது. இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தின் ஒட்டுமொத்த காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே தினத்தை குறி வைத்து பிரபாஸ் நடிக்கும் ’ப்ரோஜெக்ட் கே’ படமும் தயாராகி வருகிறதாம். இதனால் வணிக ரீதியாக இரண்டு படங்களும் பெரும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்த பலர், நிச்சயம் சலார் படம் பெரியளவில் ஹிட்டாகும் என்று கூறி வருகின்றனர். இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.

அதனால் அவர் அடுத்து நடித்து வரும் ‘ப்ரோஜெக்ட் கே’ படத்துக்கு பெருமளவில் வியாபார வட்டம் பெருகும் என்று கூறப்படுகிறது. மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து இந்தியன் 2 வருவது, வசூலை ஈட்டுவதற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நேரத்தில் பிரபாஸின் ப்ரோஜெக்ட் கே படம் வெளியாவது ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாம். விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக, இரு தரப்பு படக்குழுவினர் கலந்துப் பேசி முடிவெடுக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.