ஆஸ்கர் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரபு தேவா நடனம்..!!
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் பல விருதுகளை வென்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றது. இதையடுத்து இந்த மாதம் 13 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் வென்றது.
இந்நிலையில், இந்த ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு உலகம் முழுவதும் பல ரசிகர் பட்டாளம் உள்ளனர். பல பிரபலங்களும், மக்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வருகின்றனர். இந்திய கிரிக்கட் வீரர்கள் முதல் பிடிஎஸ் ஜங்கூக் வரை பல பிரபலங்கள் நடனமாடிய காணொளிகள் இணையத்தில் உலாவி வந்தன.
அந்த வகையில் தற்போது, இந்தியத் திரைத்துறையில் முக்கிய நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா, நாட்டு நாட்டு பாடலுக்கு, தனது நடனக் குழுவினருடன் நடனம் ஆடியுள்ளார். இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.