லியோ படத்துக்குள் வந்த கிரிக்கெட் வர்ணனையாளர்..!!
 

விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் லியோ படத்திற்குள் இணைந்துள்ளது சினிமா துறையினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், ஜோஜு ஜார்ஜ், மன்சூர் அலி கான், மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தற்போது புதிய திருப்பமாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் லியோ படத்தில் நடித்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. அவருக்கு ஏற்கனவே சினிமாவில் அறிமுகம் இருந்தாலும், லியோ படத்துக்குள் அவருடைய வருகை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அவர் வேறுயாருமில்லை கிரிக்கெட் வர்ணனையாளர்  பிரதீப் முத்து தான் அவர். இவர் ஏற்கனவே ’மீசைய முறுக்கு’ ’வீட்ல விசேஷம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் ப்ரொஃபைலிலும் அப்டேட் செய்துள்ளார். அதேபோன்று லியோ படத்தில் நடிப்பதையும் அவர் ட்விட்டரில் அப்டேட் செய்து வைத்துள்ளார். 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே படத்தில் இருக்கும் நடிகர்களின் ஸ்கிரீன் பிரெசன்ஸ் எவ்வளவு இருக்கும் என்று தெரியவில்லை. அந்த வரிசையில் தற்போது பிரதீப் முத்துவும் இணைந்துள்ளார்.