45ல் பிரேம்ஜிக்கு... 48ல் விஷாலுக்கு...
விஷாலுக்கு அவரின் 48வது பிறந்தநாளில் திருமணம் நடக்கவிருக்கிறது. முன்னதாக மொரட்டு சிங்கிள் கிளப்பின் தலைவர் போன்று இருந்து வந்த நடிகரும், இசையமைப்பாளரும், பாடகருமான பிரேம்ஜி அமரன் தன் 45வது வயதில் இந்துவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
பிரேம்ஜிக்கும், இந்துவுக்கும் இடையே இருக்கும் வயது வித்தியாசம் அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. இந்நிலையில் தன் 48வது வயதில் தன்னை விட 12 வயது சிறியவரான சாய் தன்ஷிகாவை மணக்கிறார் விஷால்.
70ஸ் கிட்டுகளான பிரேம்ஜி அமரன், விஷாலுக்கே இப்போ தான் திருமணம் என்றால் 80ஸ் கிட்டான எங்க சிம்புவுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். 42 வயதிலும் மொரட்டு சிங்கிளாக இருக்கும் சிம்புவை மாலையும், கழுத்துமாக பார்த்துவிட மாட்டோமா என அவரின் பெற்றோரும், ரசிகர்களும் தவமாய் தவமிருந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக சிம்பு வாழ்க்கையில் காதல் வருவதும் போவதுமாக இருந்தது. அதன் பிறகு ஆன்மீகம் பக்கம் திரும்பிவிட்டார் அவர். அதில் இருந்து சிங்கிளாக இருந்து வருகிறார். அவருக்கு வீட்டில் பெண் பார்த்தும் எதுவும் செட்டாகவில்லை என கூறப்பட்டது.
இந்நிலையில் விஷாலின் திருமண அறிவிப்பை பார்த்தவர்களோ சிம்பு திருமணத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது. அவருக்கு மனைவியாக வரப் போவது 90ஸ் கிட்டாகத் தான் இருக்கும் என பேசுகிறார்கள். இதற்கிடையே இந்த வயதிலும் 20களில் இருப்பவர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இளமையாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் சிம்புவை திருமணம் செய்து கொள்ள சில 2கே கிட்ஸுகளும் தயாராக இருக்கிறார்கள்.
சிம்பு யாரையும் காதலிப்பதாக தெரியவில்லை. அதனால் நீங்களே ஒரு நல்ல பெண்ணாக பாருங்கள் அப்பா என டி. ராஜேந்தரிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறா்கள். முன்னதாக பேசாமல் சிம்பு ஏன் த்ரிஷாவை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என கேட்டு வந்தவர்கள் தற்போது மனதை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.
இதற்கிடையே சிம்புவுக்கு விரைவில் திருமணம் என வதந்திகள் வேறு பரவியது. அதுவும் ஒவ்வொரு முறையும் பெண் மாறிக் கொண்டே இருந்தது. தன்னை பற்றி வந்த திருமண வதந்திகளை பார்த்து சிம்புவே டயர்டாகி இருப்பார். அந்த அளவுக்கு வதந்தி கிளம்பியது.
கெரியரை பொறுத்தவரை மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் சேர்ந்து தக்லைஃப் படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. ஜூன் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அந்த படத்தின் ட்ரெய்லரில் கமல் ஹாசனுடன் சிம்பு மோதிய காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.