திருமணத்துக்கு பிறகு அரைநிர்வாண காட்சியில் நடித்த பிரபல நடிகை..!!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கோலோச்சிய நடிகை ப்ரியங்கா சோப்ரா. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘பேவாட்ச்’ என்கிற தொடரில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் சினிமாவுக்குள் நுழைந்தார். அதை தொடர்ந்து சேசிங் ஹேப்பினஸ், தி மேட்ரிக்ஸ் ரீசரக்ஷன்ஸ் போன்ற சர்வதேசளவிலான படங்களில் நடித்துள்ளார்.
மேலும் குவாண்டிகோ, சூப்பர்சோல் போன்ற பிரபல வலை தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். இந்த வரிசையில் அவருடைய நடிப்பில் தயாராகியுள்ள சிட்டேடன் வெப் சிரீஸ் வரும் ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. உலகளவில் இந்த வெப்சிரீஸுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இதனுடைய புதிய முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் ப்ரியங்கா சோப்ரா, கதாநாயகனுடன் மிகவும் நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஹாலிவுட்டில் செட்டிலாகிவிட்ட ப்ரியங்கா சோப்ரா, இங்கிலாந்தைச் சேர்ந்த நிக் ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதில் ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இதனால் சிட்டாடல் வலை தொடரில் ப்ரியங்கா சோப்ரா படுக்கை அறை காட்சியில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் பிரைம் நிறுவனம் மற்றும் ரூஸோ பிரதரஸ் இணைந்து இந்த தொடரை தயாரித்துள்ளனர். மொத்தம் 6 அத்தியாயங்கள் கொண்ட முதல் சீசனில், ரிச்சர்ட் மேடன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ஸ்டான்லி டக்கி, லெஸ்லி மேன்வில்லே, ஓஷி இக்ஹைல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த தொடர் இதே பெயரில் இந்தியாவிலும் தயாரிக்கப்படுகிறது. இதை ராஜ் & டி.கே இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இந்தியாவில் தயாராகும் வலை தொடரில் வருண் தவன் மற்றும் சமந்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.