ஷூட்டிங்கில் உள்ளாடையை காட்டச் சொன்னார்- ப்ரியங்கா பகீர்..!!
கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை ப்ரியங்கா சோப்ரா, 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து இந்தி சினிமாவில் நடிக்கத் துவங்கிய அவர், பல போராட்டங்கள் கடந்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்ட ப்ரியங்கா சோப்ரா, இந்திய திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து சமீபத்திய நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த தகவல்கள் இணையத்தையே அலறவிட்டுள்ளன.
சினிமாவுக்கு வந்த புதியதில் ஒரு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்காக ஷூட்டிங் சென்ற போது, இயக்குநர் என் உள்ளாடை தெரியும் படி நடிக்கச் சொன்னார். அப்போது தான் அதை பார்க்க ரசிகர்கள் கூட்டம் வரும் என்று கூறினார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், படத்தில் இருந்து உடனடியாக விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ள இந்த தகவல், பல தரப்பினரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. எனினும், பல்வேறு சர்வதேச ஊடகங்களில் இந்திய சினிமாவை ப்ரியங்கா சோப்ரா தொடர்ந்து அவமதித்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. தற்போது அவருடைய இந்த கருத்தும் சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.