நான் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்கவில்லை- போட்டுடைத்த ப்ரியங்கா சோப்ரா..!!
அண்மையில் ப்ரியங்கா சோப்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவரிடம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராம்சரண் நடித்த இந்தி படம் குறித்து பேசிவிட்டு, அவர் நடிப்பில் வெளியாகி உலகளவில் வரவேற்பு பெற்ற ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேள்விகளை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த ப்ரியங்கா சோப்ரா, தான் இன்னும் ஆர்.ஆர்.ஆர் படம் பார்க்கவில்லை என்று கூறி அதிர்ச்சி அளித்தார். மேலும் தனக்கு திரைப்படங்களை பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எனினும் அதிகளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறேன் என்று கூறினார்.
ஆஸ்கர் விழாவுக்கு முன்னதாக அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்வையாளர்களுக்கு திரையிட்டு காட்டும் நிகழ்வு நடந்தது. நெவடா மாநிலம் லாஸ் ஏஞ்சலஸில் நடந்த இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரே ப்ரியங்கா சோப்ரா தான். அதையடுத்து அந்த படம் ஆஸ்கர் வென்றதை அடுத்து டிவி ஒன்றில் பேட்டிக் கொடுத்த ப்ரியங்கா, ஆர்.ஆர்.ஆர் ஒரு தமிழ்ப் படம் என்று கூறினார்.
தற்போது அவர் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்க்கவில்லை என்று கூறியதை அடுத்து, நெட்டிசன்கள் பலர் ப்ரியங்காவை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கர் வென்ற போது, குறைந்தபட்சம் இந்திய திரைப்பட பயணத்தில் என்னுடைய பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சி என ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.