சிறகடிக்க ஆசை ப்ரோமோ : ரொமாண்டிக்கா டீல் பண்ண வெள்ளை கொடியுடன் வந்த முத்து..!

 
சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ ஒன்று வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் மீனா முத்துவின் கார் மீது வண்டியை ஏற்றிவிட்டு சரமாரியாக பேச, முத்துவின் காருக்குள்ளே இருந்த கஷ்டமர் வெளியே வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். அப்போது அந்த இடத்தில் ட்ராபிக்மேன் வரவும் இது என்னுடைய பொண்டாட்டி தான் என முத்து சொல்லுகின்றார்.

இதன் போது அந்த கஷ்டமர் இதுதான் அந்த வாயாடி பொண்டாட்டியா? பேயாட்டம் ஆடுவாங்க என்று சொன்னிங்களே என்று போட்டுக் கொடுக்கிறார். இதனால் மீனா கோபத்துடன் வீட்டுக்கு செல்கின்றார்.

இதை தொடர்ந்து முத்து மீனாவை சமாதானப்படுத்துவதற்காக கட்டிலுக்கு நுளம்பு வலை அடிப்பதற்கு நபர் ஒருவரை அனுப்புகின்றார். அதன்பிறகு முத்து வெள்ளை கொடியுடன் சமாதானம் என்று சொல்லி வரவும் இப்படித்தான் சவாரிக்கு வர எல்லார்கிட்டயும் என்ன பத்தி சொல்லுறீங்களா என மீனா திட்டுகிறார்.

ஆனாலும் முத்து அப்படி இல்லை இப்படி நான் கலகலப்பாக பேசினால் தான் அவர்களுக்கும் ஜாலியா இருக்கும். காசு வரும் அதுக்கு பிறகு அல்வாவும் வரும் என மீனாவை சமாதானப்படுத்துகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ .

<a href=https://youtube.com/embed/QO7N7kkwGIk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/QO7N7kkwGIk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">