சன்னி லியோனின் நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு... பேனர் கிழிப்பு!! சூடான ரசிகர்கள்...

 

புதுச்சேரியில் புத்தாண்டுக் தினத்தையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை தனியார் நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர். அதன்படி புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து தேசியளவில் பிரசித்தி பெற்ற இசைக்குழுவினர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை சன்னி லியோன் பங்கேற்கவுள்ளதால், தனியார் நிறுவனம் ஆயிரக்கணக்கான ரூபாயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தற்போது உயர்நீதிமன்ற வழக்கின் உத்தரவின் பேரில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பிரபலமானவர்கள், திரை பிரபலங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என அறிவித்திருந்ததால், நடிகை சன்னி லியோன் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்பாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. இதற்கிடையே ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்தவர்கள் விழா ஏற்பாட்டாளர்களிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டை ஒட்டி புதுச்சேரியில் சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழர் களம் மற்றும் பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழர் களம் செயலரான அழகர் தலைமையில் பலரும் பழைய துறைமுகச் சாலையில் கூடி கோஷம் எழுப்பியபடி துறைமுக வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீச்சாருடன்  தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதனிடையே, ஆத்திரமடைந்த அமைப்பினர் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். உடனடியாக அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும், சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுநல அமைப்புகளின் முற்றுகை காரணமாக பழைய துறைமுகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.