வசூலை வாரிக் குவித்த புஷ்பா 2.. எத்தனை கோடிகள் தெரியுமா?

 

தெலுங்கில் மட்டும் இல்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம் என்று பான் இந்திய அளவிலேயே புஷ்பா 2 திரைப்படம் இன்றைய தினம் வெளியானது. தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் புஷ்பா 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் கிட்டத்தட்ட அதன் வெற்றியை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது. இதற்கு இடையில் அல்லு அர்ஜுன் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை . இந்த ஒரு படத்திற்காகவே அயராது உழைத்துள்ளார்.

இந்த நிலையில், புஷ்பா 2 படம் தமிழ் நாட்டில் 11 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது உள்ளதாக அதிகார்வ பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே புஷ்பா 2 உலகளவில் 294 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்து உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து தமிழ் நாட்டில் இதன் வசூல் 11 கோடியென வசூல் விபரம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.